அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபலம்! நடந்தது என்ன?
நடிகர் விஜய் ஆண்டனி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிச்சைக்காரன் திரைப்படம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி. தற்போது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் “பிச்சைக்காரன்” திரைப்படம் நினைத்து பார்க்காத வெற்றியை தந்தால் தற்போது அதில் “பாகம் 2” உருவாக்கப்படுகிறது.
மேலும் “பாகம் 1 ல்” அம்மா மீதுள்ள நன்றிக்கடன், அன்பு, காதல், தியாகம் என பல கருப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் விஜய் அண்டனின் அடுத்த திரைப்படமான “பிச்சைக்காரன் 2 ”இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரித்து வருகிறது.
மருத்துவமனையில் அவசர பிரிவிலிருக்கும் பிரபலம்
இதன்படி, நடிகர் விஜய் அண்டனிக்கு படப்பிடிப்பின் போது பலத்த அடி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் விரைவில் சிகிச்சையிலிருந்து விடுபட்டு மீண்டும் படிப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய் அண்டனி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.