Tv show: அரந்தாங்கி நிஷா காலில் விழுந்த திவாகர்.. பதறிப்போய் தூக்கிய அரங்கத்தினர்
நடிப்பு அரக்கன் என மக்களால் கொண்டாடப்படும் திவாகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொடுத்த அலப்பறை அரங்கத்தினரை பதற வைத்துள்ளது.
அது இது எது சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் அது இது எது.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாகாபா ஆனந்த் இருந்து வருகிறார். பிரபலங்களை அழைத்து அவர்களுக்கு சில டாஸ்க்கள் கொடுத்து, இறுதியாக வெற்றிப் பெற்ற ஜோடிகளுக்கு பாராட்டுக்களும், பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சின்னத்திரை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வதால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
காலை வாரிய திவாகர்
இந்த நிலையில், இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மற்றும் பிக்பாஸ் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நடிப்பு அரக்கன் என தன்னை தானே பட்டம் சூட்டிக் கொண்ட திவாகர் தன்னுடைய நடிப்பு திறமையின் உச்சத்தை காட்டியிருக்கிறார். அவருடைய நடிப்பு திறமையை கலாய்க்கும் வகையில், அரந்தாங்கி நிஷா களமிறக்கப்பட்டார்.

அப்போது திவாகர், “ நான் நடிப்பு அரக்கன் என கத்த, அதற்கு நிஷா, “ நடிப்பு கிறுக்கன்.. ” என்று தான் சொல்லலாம் என டைமிங் காமெடியால் கலாய்த்து விடுகிறார். அதன் பின்னர் மீண்டும் ஒரு திரைப்பட காட்சியில் நிஷாவின் காலை பிடித்து கொண்டு கதறியழுதுக் கொண்டிருக்கிறார்.
இப்படி இந்த வார எபிசோட்டை திவாகர்- நிஷா இருவரும் சிறப்பாக கொண்டுச் சென்றுள்ளனர். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |