பஞ்சு மாதிரி குஷ்பு இட்லி சாப்பிடனுமா? அப்போ இட்லி மாவில் இந்த எண்ணெய் சேருங்க
இட்லி என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நாம் என்னதான் இட்லி மாவு செய்தாலும் இட்லி செய்து எடுக்கும் போது அது கல்லு போலவே வரும்.
இந்த கல்லு தன்மை இல்லாமல் இட்லியை குஷ்பு இட்லி போல் பஞ்சு போல செய்ய வேண்டும் என்றால் வீட்டில் நமக்கு தெரிந்த சில சில விஷயங்களை பின்பற்றினால் போதும்.
அப்படியென்ன இட்லி மாவில் சேர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இட்லி மாவு
இட்லி மாவு செய்யும் போது அதற்கு தேவையான பொருட்களை சரியான அளவில் சேர்க்க வேண்டும். இதற்காக நீங்கள் ஒரு அளவான கப்பை எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு கப் அளவு இட்லி அரிசியை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த அரிசியை நன்றாக கழுவி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
அரிசி எடுத்த அதே கப்பில் உளுத்தம் பருப்பு ஒரு கப் அளவு எடுத்து அதையும் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற விட வேண்டும்.
அதே கப்பில் கால் கப் ஜவ்வாரிசியை நன்றாக கழுவி அரிசியுடன் சேர்த்து நன்றாக ஊறவைக்க வேண்டும். எல்லாம் நன்றான ஊறி வந்ததும் இதை எல்லாம் அரைத்து எடுக்க வேண்டும்.
முதலில் ஊளுத்தம் பருப்பை நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் அரிசியை அரைத்து அதனுடன் ஜவ்வாரிசியையும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் இந்த அரைத்த மாவுக்கலவை எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் போட வேண்டும். பின்னர் ஆமணக்கு எண்ணெய் ஒரு 4 தேக்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இந்த மாவுக்லவையை சரியாக 8 மணி நேரம் நன்றாக புளிக்க வைக்க வேண்டும். மாவு நன்றாக புளிக்கவில்லை என்றால் இட்லி கல்லு போல வரும்.
அதனால் நன்றாக புளிக்க வைத்து நீங்கள் இட்லி செய்து எடுக்கலாம். இப்படி செய்தால் கடைகளில் வாங்குவதை போல குஷ்பு இட்லியை நீங்கள் தினம் தினம் வீட்டிலும் சாப்பிடலாம்.