அடிக்கிற வெயிலுக்கு இந்த பழங்கள் சாப்பிட்டா தண்ணீர் குடிக்க தேவையில்லை! என்ன பழங்கள் தெரியுமா?
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து என்பது அதிகமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உண்ண வேண்டும்.
இதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக இருக்க வேண்டும். உடல் நீரேற்றத்துடன் இல்லாவிட்டால் உடலில் பல நோய்கள் வரும்.
இந்த கோடை காலத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 2 இருந்து 8 கிளாஸ் தண்ணீரை குடிப்பது அவசியம். எந்த நேரமும் தண்ணீர் குடிக்க கஷ்டமாக உள்ளவர்கள் நீர்ச்சத்து நிரம்பிய பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம்.
அது எந்தெந்த பழங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீர்ச்சத்து பழங்கள்
சில பழங்களில் வைட்டமின்கள் அதிகம் காணப்படும் ஆனால் சில பழங்களில் தண்ணீர்சத்து அதிகம் காணப்படும். அந்த பழங்கள் என்னவென்று பார்த்தால்
- வாட்டர்மெலன்
- முலாம் பழம்
- ஆரஞ்சு பழம்
- திராட்சை
- அன்னாசி
- பப்பாளி
- பேரிக்காய்
- இளநீர்
போன்ற பழங்கள் காணப்டுகின்றன. வாட்டர் மெலன் பழத்தில் கிட்டதட்ட 91 சதவீதம் தண்ணீர்ச்சத்து காணப்படுகின்றது. இதிலுள்ள அதிகப்படியான எலக்ட்ரோலைட்டுகள் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும்.
மிகவும் எளிமையாக கிடைக்கும் முலாம் பழத்தில் 90 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகின்றது. இதை நீரழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
ஆரஞ்சு பழத்தில் கிட்டதட்ட 88 சதவீதம் வரைக்கும் தண்ணீர்ச்சத்து இருக்கிறது. திராட்சையில் 81 சதவீதம் வரை நீர்ச்சத்து இருக்கிறது.
இந்த பழம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அன்னாசி பழத்தில் 86 சதவீதம் வரை தண்ணீர்ச்சத்து நிறைந்து உள்ளது. இது ஜீரண மண்டல ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
பப்பாளியில் 88 சதவீதம் வரை நீர்ச்சத்து இருப்பதால் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க இது உதவும். பேரிக்காயில் 84 சதவீதம் வரையிலும் நீர்ச்சத்து இருக்கிறது.
இளநீர் என்றால் எல்லோருக்கும் தெரியும் இதில் 95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.தேங்காய் பழங்களின் வகையாகும். இதில் நிறைய மினரல்களும் எலக்ட்ரோலைட்டுகளும் இருக்கின்றன.
இது குடித்தவுடன் உடலின் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.