நடிகர் போண்டா மணியின் தற்போதைய நிலை என்ன? தனுஷ் கொடுத்த நிதியுதவி!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி(59) சிறுநீரக பிரச்சினை செயலிழப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மருத்துவ செலவுக்கு உதவிக்கரம் நீட்ட திரையுலகினர் முன்வர வேண்டும் என சக நடிகரான பெஞ்சமின், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதன் பின்னர், அவரது மருத்துவ செலவுக்கு உதவிக்கரம் நீட்ட திரையுலகினர் முன்வர வேண்டும் என சக நடிகரான பெஞ்சமின், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பின், நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்ய நடிகர் வடிவேலு தன்னுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் போண்டா மணியை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக நடிகர் தனுஷ், ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.
நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் போண்டா மணி நடித்துள்ளார்....