கோடிகளில் சொத்து.. கணவர்களை ஓரங்கட்டிய நடிகைகள் யாரெல்லாம் தெரியுமா?
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர்களின் சொத்து மதிப்பு அவர்களின் கணவர்களை விட அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளது.
பல இன்னல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முகங்கொடுத்த நடிகைகள் பலரின் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன.
அப்படியாயின், நாம் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக பார்க்கும் நடிகைகளின் சொத்து மதிப்பு விவரங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. நடிகை ஐஸ்வர்யா ராய்
உலக அழகி யார் என்று கேட்டால், அதற்கு பலரின் வாயில் இருந்து வரும் வார்த்தை ஐஸ்வர்யா ராய் தான். அந்தளவு ரசிகர்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ம் ஆண்டு பிரபல நடிகரின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.
பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதிகளில் ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 900 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், கணவர் அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு சுமார் 450 கோடி ரூபாய் மட்டுமே என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
2. நடிகை ஆலியா பட்
தற்போது பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகையாக இருப்பவர் தான் ஆலியா பட். இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் திருமணம் செய்து கொண்டார். ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் கேட்கும் ஆலியா பட்டின் மொத்த சம்பளம் சுமார் 550 கோடி ரூபாய் என்றும் ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு சுமார் 345 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது.
3. நடிகை தீபிகா படுகோன்
பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர், கடந்த 2018ல் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபிகா சினிமா மட்டுமல்லாமல் வியாபாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். பல வழிகளில் பணம் சாம்பாரிக்கும் தீபிகாவின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய், அதே சமயம் அவரின் கணவர் ரன்வீர் சிங்கின் சொத்து மதிப்பு சுமார் 245 கோடி ரூபாய் மாத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
