ஏன்டா... இந்த மாதிரி முட்டாள்களோட நடிக்கிறோம்னு தோணும் – பிரபல நடிகை ஓபன் டாக்
இந்த மாதிரி முட்டாள்களோட ஏன்டா நாம நடிக்கிறோமோனுன்னு எனக்கு தோணும் என்று பிரபல நடிகை வினோதினி மனம் திறந்து பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை வினோதினி
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை வினோதினி. இவர் ஆண்டவன் கட்டளை, கேம் ஓவர், தலைமுறைகள் என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இதுவரைக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வினோதிக்கு, கமல், ரஜினி, அஜித் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வினோதினி ஓபன் டாக்
இந்நிலையில், ஒரு சேனலுக்கு நடிகை வினோதினி பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அந்த பேட்டியில் அவர் கூறுகையில்,
எனக்கு நடிகர் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு தான் மிகவும் பிடிக்கும். பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரும்.
ஆனால், நான் எப்போதும் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்வார்கள்.
ஆனால், படப்பிடிப்பில் நடிகர்களுக்கு பொறுப்பே இருக்காது. நாளைக்கு ஒரு காட்சிக்கு படப்பிடிப்பு இருக்கிறது என்றால், இன்றைக்கே அவர்கள் தயாராக மாட்டார்கள்.
படப்பிடிப்பில் வந்து நின்று அப்படி சொதப்புகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, ஏன்டா.. இந்த மாதிரி முட்டாளகளோட சேர்ந்து நடிக்கிறோம் என்று எனக்கு தோன்றும் என்றார்.