நடிகை விசித்ராவின் தந்தை கொலை செய்யப்பட்டாரா? பல ஆண்டுகளுக்கு பின்பு உடைந்த உண்மை
தமிழ் சினிமாவில் கொமடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை விசித்ராவின் சொந்த கதை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை விசித்ரா
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் துணை நடிகையாக வலம் வந்த நடிகை விசித்ரா தற்போது சீரியலில் வில்லியாக நடித்து மக்களிடையே பிரபலமாகியுள்ளார்.
இவர் திருமணத்திற்கு பின்பு கணவருடன் புனேவில் வசித்து வந்த நிலையில், இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். குடும்பத்திற்காக நடிப்பினை விட்ட இவர், தற்போது கணவரின் சம்மதத்துடன் நடிக்க வந்துள்ளார்.
சமீபத்தில் இவர் தன்னுடைய குடும்பத்தின் உண்மைகளை வெளிப்படையாக கூறியுள்ளார். இவர் சிறுவயதாக இருக்கும் போதே இவரது தந்தை முகமூடி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு விட்டாராம்.
அப்பா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த தாய் இதனால் நிலைகுலைந்து போனாராம். ஆனாலும் அப்பாவின் நினைவினால், தவித்து வந்த இவரது தாயும் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனால் தனிமையில் இருந்து கஷ்டப்பட்ட அவர் தற்போது சீரியல்களிலும், சில நிகழ்ச்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றார்.