பிரபலங்களுடன் களைகட்டிய நடிகை வரலக்ஷ்மியின் சங்கீத் விழா... வைரலாகும் புகைப்படங்டகள்
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியிருந்த நிலையில், தற்போது சங்கீத் விழா புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை வரலக்ஷ்மி
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.
வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு காதலர் நிக்கோலை சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
வரலக்ஷ்மியின் வருங்கால கணவருக்கு அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு டீனேஜில் மகள் இருக்கிறார் என்பதும் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.
வரலக்ஷ்மி நிக்கோலாய் இருவரின் திருமணத்திற்கு தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் என முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்த புகைப்படங்களும் அண்மையில் வைரலானது.
நேற்று மெஹந்தி நிகழ்வு நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பரவியது. மஞ்சள் உடையில் வரலக்ஷ்மி இருக்கும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து தள்ளியது.
இந்நிலையில், வரலக்ஷ்மி நிக்கோலாய் இருவரின் சங்கீத் நிகழ்வு நேற்று இரவு சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
இதில் சினிமா பிரபலங்கள் பலரும் குவிந்தனர். திரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, பிரபுதேவா, பிரபு, விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா, வாசுகி பாஸ்கர், மீனா, மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |