சரத்குமாரின் மகள் பாதியாக வெயிட்டை குறைச்சது எப்படி? இதெல்லாமே சாப்பிடுவாங்களாம்!
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சமீபத்தில் கடுமையாக முயற்சி செய்து மிக வேகமாக தன்னுடைய எடையை குறைத்துள்ளார்.
அதற்கு அவர் என்ன மாதிரியான டயட்டை பின்பற்றினார் என்று பார்ப்போம்.
கடுமையான உடற்பயிற்சி
நம்முடைய இலக்கை அடைவதற்கு நம்முடைய மன உறுதி தான் முக்கியம்.
இலக்கின் மீது பிடிவாதம் இருந்தால் எளிதாக இலக்கை அடையலாம் என்று தன்னுடைய எடை இழப்பு பயணம் குறித்து வரலட்சுமி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்திருந்தார்.
ஒரு நாளைக்கு கிட்டதட்ட ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்.
காலை எழுந்ததும் மாறிப் படிகளில் ஏறி இறங்குவது, ஜம்பிங் போன்ற இன்டோர் உடற்பயிற்சிகளையும் மாலை நேரங்களில் ஜிம்முக்கு சென்று எடை தூக்கும் பயிற்சி, ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் கார்டியோ ஆகியவற்றை மேற்கொள்கிறார்.
வரலட்சுமியின் டயட் சீக்ரெட்
காலை - காலையில் தூங்கி எழுந்ததும் வரலட்சுமி இரண்டு கிளாஸ் அளவுக்கு வெந்நீர் தான குடிப்பாராம்.
காலை உணவு - தன்னுடைய ஊட்டச்சத்து நிபுணர் பரிநதுரைப்பதின் அடிப்படையில் காலை உணவை தேர்வு செய்து சாப்பிடுவாராம். அது வாரத்திற்கு வாரம் மாறுபடும். அதில் மிக முக்கியமான பிரேக்பாஸ்ட்களில் ஒன்றாக இருப்பது பாதாம் பாலும் வாட்டர் மெலனும்.
இரவு உணவு - இரவு உணவை 7.30 மணிக்கு முன்பாக எடுத்துக் கொள்வாராம். 7.30 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் உணவு எடுக்க மாட்டாராம்.
உடற்பயிற்சி நேரம்
பொதுவாக பலரும் குழம்பும் விஷயம் இதுதான். உடல் எடையைக் குறைக்கும்போது காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சிறந்ததா அல்லது மாலையா என்று குழப்பம் இருக்கும். அப்படி எதுவும் கிடையாது.
அவரவர் வேலை மற்றும் சௌகரியத்தை பொறுத்தது. வரு சில நாள் காலையிலும் சில நாள் மாலையிலும் செய்வாராம்.
பிரியாணி பிரியை
வரலட்சுமிக்கு பிரியாணி என்றால் உயிராம்.
வாழ்நாள் முழுவதும் ஒரே உணவு தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் கண்ணை மூடிக் கொ்ணடு பிரியாணி என்று தான் சொல்வாராம்.
எல்லா உணவுகளையும் விட வருவுக்கு பிரியாணி என்றால் உயிர். அதிலும் மட்டன் பிரியாணி மிகப் பிடிக்குமாம்.
உடற்பயிற்சிக்கு எப்படி நேரம் ஒதுக்குகின்றாரோ அதே போல உணவுக்கும் நேரம் ஒதுக்குகின்றார். அதனால் அதான் அவரினால் இழக்கினை அடைய முடிகின்றது.