குக் வித் கோமாளியில் வனிதா மகள் - இவரும் மீடியாவிற்குள்? குழப்பத்தில் ரசிகர்கள்!
அர்ஜின் தாஸ்வுடன் வனிதாவின் மகள் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியில் குக்கள், கோமாளிகள் என இரு தரப்பினர் இருப்பார்கள். இதில் பெரும்பாலும் பிரபலங்கள் தான் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஷோவில் தற்போது 4வது சீசன் வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த சீசனில் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா தெரிவுச் செய்யப்பட்டார்.
அர்ஜின் தாஸ்வுடன் இருக்கும் வனிதாவின் மகள்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் மகளுடன் குக் வித் கோமாளி ஷோவில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவருடன் மட்டும் இல்லாமல் நடிகர் அர்ஜின் தாஸ்வுடன் இருக்கும் புகைப்படமும் அந்த பதிவில் இருக்கின்றது.
பதிவை பார்த்த பிரபலங்கள் வனிதாவின் மகளும் மீடியாவிற்குள் வருகிறாரா? என குழப்பமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
அத்துடன் இவர் மாத்திரம் மீடியாவிற்குள் வந்தால் பலத்த ஆதரவு கிடைக்கும் எனவும் முனுமுனுத்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |