மீண்டும் வில்லியாக களமிறங்கிய வனிதா... எந்த சீரியல் தெரியுமா?
நடிகை வனிதா விஜயகுமார் இதயம் சீரியலில் சரோஜா அக்கா கதாபாத்திரத்தில் களமிறங்கி அதிரடி காட்டியுள்ளார்.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் சினிமா பின் புலத்திலிருந்து வந்தவர் தான் நடிகை வனிதா. நட்சத்திர ஜோடியான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்தவர் தான் வனிதா.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா ஆவார். முதல் மனைவி முத்துக்கண்ணுவிற்கு பிறந்தவர் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர்.
முதல் மனைவியின் சம்மதத்துடன் நடிகை மஞ்சுளாவினை திருமண்ம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்தவர்கள் தான் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆவர்.
அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், நடிகை வனிதா மட்டும் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கின்றார். மேலும் தனது அப்பாவிடம் பயங்கரமாக சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறவும் செய்தார்.
அப்பொழுது பலருக்கும் வில்லியாக இருந்த வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக வலம்வந்தார்.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது ஒரு சிறந்த அம்மாவாக இவர் நடந்து கொண்ட விதம் இவரை மேலும் பிரபலப்படுத்தியது.
சமீபத்தில் தானே இயக்கி வெளியான படம் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படத்தில் தனது முன்னாள் காதலர் ராபர்ட் உடன் நடித்திருந்தார்.
இப்படம் பயங்கர தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் சின்னத்திரை நடிக்க வந்துள்ளார். ஆம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் இதயம் தொடரில் சரோஜா அக்காவாக களமிறங்கி மிரட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |