இப்படியா Dress போடுவாங்க? ஆண் போட்டியாளரை வறுத்தெடுத்த வனிதா
பிக்பாஸ் வீட்டிலுள்ள ஆண் போட்டியாளர் ஒருவரின் ஆடையை நடிகை வனிதா கடுமையான விமர்சித்து பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனை ஆரம்பித்து விட்டது.
கடந்த ஏழு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியிருக்கிறார்.
“ ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு..” என்ற தொனிப் பொருளுக்கமைய விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை கொண்டுப் போவார் என்பதனை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதன்படி, நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் பொழுது தன்னுடைய யதார்த்தமான பேச்சு திறமையினால் போட்டியாளர்களை திணற வைத்திருப்பார். இதனால் விறுவிறுப்பு அதிகமாகியுள்ளது.
ஆண் போட்டியாளரை கடுமையாக விமர்சித்த வனிதா
இந்த நிலையில், மற்ற சீசன்களை படும் மோசமாக விமர்சனம் செய்து பிரபலமான வனிதா விஜயகுமார், இந்த சீசனிலும் தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில், நடிகை வனிதா ஆண் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் அணியும் ஆடை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதாவது, முக்கிய போட்டியாளராக இருக்கும் நடிகர் சத்யா பிரபல சினிமா பாடகியான ரம்யாவின் கணவர் ஆவார். இவர், எப்போதும் உடற்பயிற்சி செய்து உடம்பை எப்போதும் கட்டுமஸ்தாக வைத்து கொள்வார்.
சத்யா, ஆணழகன் போட்டியில் பங்கு பற்றி பரிசுகள் எல்லாம் வாங்கியிருக்கிறார். இதனால் இவர் அணியும் ஆடைகள் எப்போதும் கவர்ச்சிகரமாக உள்ளன.
இதனை விமர்சித்த வனிதா விஜயகுமார், “ பெண்கள் அணியும் டிரெஸ் ஆண்களுக்கு ஒருவித தூண்டுதலை ஏற்படுத்துகிறது என்றால் ஆண்கள் போடும் ஆடைகள் இது போன்ற உணர்வை தூண்டாதா? படுக்கையறையில் போடும் ஆடைகள் போன்றா பிக்பாஸ் வீட்டில் அணிவீங்க...” என விமர்சித்து பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |