சர்ச்சைக்கு மத்தியில் பார்த்திபன் மகளுடன் புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா
பார்த்திபனுக்கும் நடிகை த்ரிஷாவிற்கும் தற்போது சர்ச்சைகள் உருவாகிக்கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது த்ரிஷா மற்றும் பார்த்திபனின் மகள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா
நடிகர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதை அடுத்து நடிகர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டனர்.
இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக கலந்துகொண்டதற்கு த்ரிஷாவை விமர்சித்து இருந்தார்.

அவர் பார்த்திபன், “குந்தவை வீட்டில் குந்த வைக்கப்பட்டால் நல்லது” என மேடையில் பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை த்ரிஷா கண்டனமும் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பார்த்திபன் மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு நீங்கள் கோடிட்ட இடங்களை நிரப்பும் முன்னர் முழு காணொளி வரும் என கூறி இருந்தார். இதன் பின்னர் முழு காணொளியும் வந்தது.
இப்படி ஒரு பக்கம் சர்ச்சை போய்க்கொண்டு இருக்க நடிகை த்ரிஷா, பார்த்திபன் மகள் கீர்த்தனா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பணியாற்றியவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு இயக்குநர் மணி ரத்னம் உள்ளிட்ட ‘பொன்னியின் செல்வன்’ குழுவுடன் அவர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதில் பார்த்திபன் மகள் கீர்த்தனாவும் இருக்கிறார்.
பார்த்திபனுடன் த்ரிஷாவிற்க சர்ச்சை இருக்கும் சமயத்தில் தற்போது கீர்த்தனா பார்த்திபன் மற்றும் த்ரிஷா புகைப்படங்கள் ரசிகர்களை குழம்ப செய்துள்ளது.
கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை. இருப்பினும் இயக்குநர் மணிரத்னத்தின் குழுவில் இருப்பதாக கூறப்படுகிறது.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |