பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன்
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்தில் தான் கலந்துக் கொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவின் குந்தவை கதாப்பாத்திரம் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகிய நிலையில், நடிகை திரிஷா குறித்த கருத்தை சரமாரியாக தாக்கும் வகையில், பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
த்ரிஷா பற்றிய சர்ச்சை
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் விவாகரத்து விடயத்தில் அதிகமான சர்ச்சைகளில் சிக்கிவரும் நபரைாக த்ரிஷா தான் இருக்கின்றார்.

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விஜயின் குடும்ப வாழ்க்கை விவகாரம், அரசியல் நடவடிக்கைகள், திரிஷா உடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது, விவாகரத்து தொடர்பாக மேடையில் வொர்த்தே இல்லை என கூறியது என அவரை சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் த்ரிஷா நேரடியாகவே சம்பந்தப்படுகின்றார்.
பார்த்திபன் கருத்து
இந்தநிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நிகழ்ச்சியில் பேசியபோது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இவர் பதிலளிக்கும் விதம் சற்று வித்தியாசமானது என்பது அனைவரும் அறிந்தது தான். அந்தவகையில், பார்த்திபன் தனது பாணியில் "குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது.
மேலும் எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும். சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார். குறித்த கருத்து இணையத்தில் படு வைரலாகி, கடுமையான நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில்,பார்த்திபன் கூறிய கருத்துக்கு மறைமுகமாக நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பார்த்திபனின் கருத்து முற்றிலும் முட்டாள்தனமானது என்றும் திரிஷா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
த்ரிஷா தனது பதிவில் "அறிவற்ற கருத்து, பேசுபவரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது எனவும், மைக் இருப்பதால் ஒரு கருத்து அறிவு சார்ந்ததாகவோ, நகைச்சுவையாகவோ மாறிவிடாது" எனவும் குறிப்பிட்டு மறைமுகமாக தனது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிஷா கண்டனம் தெரிவித்த உடனேயே நடிகர் பார்த்திபன் பதில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்க சக்தி..! இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை..என்று கூறி ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஆடியோவை முழுமையாக காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |