விஜய் ஒரு சைலண்ட் கில்லர் - முதல்வரை புகழ்ந்த நடிகை த்ரிஷா
தற்போது முதல்வரும், தளபதியுமான விஜய் பற்றி விஜய் பற்றி புகழ்ந்து பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

விஜய் த்ரிஷா
தற்போது தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகி உள்ளார். இவர் இதற்கு முன்னர் நடிகராக இருந்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார்.
விஜய், நடிகராக இருந்தபோது அவருக்கு ராசியான ஹீரோயின்களாக த்ரிஷா கிருஷ்ணன், சிம்ரன், சங்கவி, சமந்தா உள்ளிட்டோர் இருந்தார்கள்.
அதில் விஜய்க்கு மிகவும் ராசியான ஹீரோயின் என்றால் அது த்ரிஷா தான் என்று பல விஜய் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் சிலர் இல்லை சிம்ரன் தான் விஜய்க்கு ராசியான நடிகை என்று கருத்து தெரிவித்து வந்தனர். இது இணையத்தில் ஒரு விவாதமாகவே எழுந்தது.

விஜய்யை புகழ்ந்த த்ரிஷா
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் புகைப்படத்தை காட்டியதும் த்ரிஷா விஜய் பற்றி கூறிய விடயம் தற்போது இணயைத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் படத்தை காட்டி தளபதி விஜய்யண்ணா பற்றி உதாவது சொல்லுங்க என்று த்ரிஷாவிடம் கேட்க அவர் உடனே சார்மர் என்றார் த்ரிஷா. அவரிடம் ஒரு சைலண்ட் சார்ம் இருக்கும் என்றார்.

அதற்கு பேட்டி எடுத்தவரோ சைலண்ட் கில்லர் என்றதும் ஆமாம் சைலண்ட் கில்லர் தான் என்று கூறினார் த்ரிஷா. அவர் பேசத் தேவையில்லை. அவரிடம் ஒரு மிஸ்டீரியஸ் சார்ம் இருக்கும் என்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |