நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா: தடுப்பூசி செலுத்தியும் அரங்கேறிய சோகம்
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் உள்பட ஒருசில கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்தும் தற்போது எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நான் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதால் பெரிய அளவில் பாதிப்பில்லை. தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
தயவு செய்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள், நான் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த, பிரார்த்தனை செய்த நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி’ என்று த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.
— Trish (@trishtrashers) January 7, 2022