வாரத்தில் மூன்று நாட்கள் தீவிர விரதம்... தமன்னாவின் மாற்றத்திற்கு காரணம் என்ன?
நடிகை தமன்னா ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ள நிலையில், வாரத்திற்கு மூன்று நாட்கள் விரதம் இருந்துள்ளது ரசிகர்களுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா ஆன்மீகத்தில் அதிகமான நம்பிக்கை கொண்டுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் வெளியான ஒடேலா திரைப்படத்தில் சிவபக்தையாக நடித்துள்ளார் தமன்னா. வருடம் தோறும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று மகாசிவராத்திரி விழாவிலும ்தவறாமல் கலந்து கொண்டு வருகின்றார்.

சிவபெருமானின் தீவிர பக்தையாக இருக்கும் தமன்னா தற்போது துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வருகின்றார். அதாவது வாரத்திற்கு மூன்று நாட்கள் கட்டாயமாக தீவிரமாக விரதம் இருந்து வருகின்றார்.
மேலும் இந்த விரத நாட்களில் முற்றிலும் விரதம் இருப்பதாகவும், மற்ற நாட்களில் வழக்கமான உணவுகளை உட்கொள்ளாமல் பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார்.

தமன்னாவின் இவ்வாறான தீவிர விரதம் எதற்காக என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. திரைவாழ்க்கையில் அடுத்தக்கட்ட வெற்றிற்காகவா? அல்லது அவரது ஆன்மீக தேடலின் ஒரு பகுதியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனாலும் அவரது பிஸியான நடிப்பிற்கு மத்தியிலும் இவ்வாறு விரதம் மேற்கொள்வது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |