ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மையாகவே மாறிய தமன்னா... குவியும் லைக்குகள்
நடிகை தமன்னா வெள்ளை நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கலக்கல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
தமன்னா
மும்பை மகாராஷ்டிராவில் பிறந்த தமன்னா, படித்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். பட வாய்ப்பை தேடி வந்த தமன்னாவிற்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் கேடி என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார்.
மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் இவர் தனது நடிப்பையும் தாண்டி தனது நிறத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.
கேடி திரைப்படத்தை தொடர்ந்து, வியாபாரி,கல்லூரி போன்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து தனி தனி மொழிளிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.
ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடனமாடிய காவாலய்யா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
இந்நிலையில் வித்தியாசமான ட்ரெண்டிங் உடையில் மெழுகு சிலை போல் மாறிய தமன்னாவின் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |