புர்கா அணிந்து கோவிலுக்கு சென்ற நடிகை: சர்ச்சையை கிளம்பும் வீடியோ
சுப்ரமணியம் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஸ்வாதி புர்கா அணிந்து ரயில் நிலையம் சென்ற வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை ஸ்வாதி
ஸ்வாதி தமிழில் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகினார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் போராளி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலாகுமாரா, கனிமொழி, யட்சன், வடகறி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதன் பிறகு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து நடிப்பில் இருந்து விலகியிருந்தார். திருமணத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு வராமல் தெலுங்குத் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
புர்கா அணிந்து ரயிலில் பயணம்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஸ்வாதி ரெட்டி அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் நடிகை ஸ்வாதி கோயில் தரிசனம் செல்வதற்காக ரயலில் புர்கா அணிந்து சென்றிருக்கிறார். அதை அப்படியே வீடியோவும் எடுத்து பதிவிட்டிருக்கிறார்.
இவரின் இந்த வீடியோவைப் பார்த்து விட்டு கோவிலுக்கு செல்லும் போது இப்படி புர்கா அணிந்து செல்வது சரியா என பலரும் பல விமர்சனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு விமர்சித்தவர்களுக்கு பதில் கொடுத்த ஸ்வாதி, நான் வெளியில் செல்லும் போது புர்கா அணிந்துக் கொண்டு தான் செல்வேன். அப்போது தான் மக்களோடு மக்களாக என்னால் பயணிக்க முடிகிறது என கூலாக பதிலளித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |