நடிகை சுனைனா கடத்தப்பட்டாரா? பின்னணியின் அம்பலமான உண்மை
நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இதன் உண்மை பின்னணி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சுனைனா
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை சுனைனா. இவர் 2008ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது ஜெினா என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிஎஸ்கே கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை தோழிகளுடன் கண்டுகளித்த சுனைனா கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டதாகவும், சமூக வலைத்தளங்களில் எந்தவொரு பதிவையும் இவர் பதிவிடவில்லை என்றும் கூறப்பட்ட நிலையில், இறுதியில் காவல்நிலையம் வரை இந்த பிரச்சினை சென்றுள்ளது.
பொலிசாரின் தீவிர விசாரணைக்கு பின்பு, நடிகை சுனைனா ரெஜினா பட ப்ரொமோஷனுக்காக இவ்வாறு நடைபெற்றதாகவும், இப்படத்தினை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்ட யுக்தி என்று தெரியவந்துள்ளது.
உண்மையிலேயே சுனைனா காணாமல் போனது போல் ஒரு வீடியோவை உருவாக்கி சமூகவலைதளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரசிகர்கள் கொந்தளித்தும் வருகின்றனர்.