நடிகை சுகன்யாவின் மகளா இது? அழகில் அம்மாவையே தோற்கடிச்சிட்டாங்களே
நடிகை சுகன்யா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சுகன்யா
முன்னனி ஹீரோக்களுடன் 90ஸ் காலக்கட்டத்தில் நடித்த நடிகை சுகன்யா, புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமானார்.
இப்படம் 1992ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் நடித்து பிரபலமானார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கிய இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டிலேயே முடிந்துள்ள நிலையில், சில தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.
தற்போது சுகன்யா தனது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார்.
மகளுடன் சுகன்யா
தனது மகளை சினிமா பக்கம் தலைகாட்டவிடாமல் வைத்துள்ள சுகன்யாவின் மகள் புகைப்படம் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு நிகழ்ச்சிக்கும் வெளியே அழைத்து வராத அவர், குடும்பத்துடன் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படம் இதுவாகும்.
அம்மா சுகன்யா போன்று அவரது மகள் அச்சு அசல் அவரைப் போன்றே இருப்பது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
சீரியல்களில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் சீரியலில் எண்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |