விஜயகுமாருக்கு இவ்ளோ பெரிய பேத்தியா? வெளிநாட்டில் குடும்பத்துடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் மகள்!
சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
தற்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழும் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

பின் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். பிறகு இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தினை கவனித்து வருகின்றார்.
இவருக்கு ரூபிகா என்ற மகளும் இருக்கிறார். தற்போது ரூபிகா தன்னுடைய 6-வது பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

