10 வருடங்களுக்கு பின் பட்டுப்புடவையில் புகைப்படம் வெளியிட்ட பிரபலம்- திருமணமா?..
சினிமாவிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீ திவ்யா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ரீ திவ்யா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.
இவர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வறுத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.
பின்னர் விஷாலுடன் இணைந்து மருந்து படத்திலும் கார்த்தியுடன் காஷ்மோரா படத்திலும், ஜிவி பிரகாஷ் உடன் பென்சில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரெமோ படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்திருப்பார்.
10 வருடங்களுக்கு பின்..
இந்த நிலையில் திடீரென சினிமாவிலிருந்து விலகி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
பின்னர் ஸ்ரீ திவ்யாவிற்கு பட வாய்ப்பு இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அந்த வகையில் சினிமாவிலிருந்து சென்று 10 வருடங்கள் ஆகின்ற நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
அத்துடன் “நம்ம ஸ்ரீதிவ்யாவா இது?” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |