இப்படி ஒரு சேலையா? கண்ணாடி சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீலீலா வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகி்னறது.
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, 'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது.
இறுதியாக நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் 1500 கோடியை கடந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள புறநானூறு திரைபடத்தில் நாயகியாக நடித்து வருகின்றார் ஸ்ரீலீலா.
இந்த திரைப்படத்தின் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவிவருகின்றது.
மேலும் இவர் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். நடிப்பை தாண்டி பல சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இவரின் நடிப்பு திறமை மற்றும் அழகையும் தாண்டி இவ்வளவு சின்ன வயதிலேயே இவரின் நல்ல குணத்துக்கும் சேவை மனபான்மைக்குமே தனி தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
இந்நிலையில் ஸ்ரீலீலா வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங்கான சேலையில் கண்ணாடி சிலை போல் காட்சியளிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |