நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? முழுவிபரம் இதோ
நடிகை சினேகா இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், இவரது சொத்து மதிப்பு விபரத்தை தெரிந்து கொள்வோம்.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, 2000ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்பு தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். பின்பு ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஏப்ரல் மாதத்தில் என பல படங்களில் நடித்து அசத்தினார்.
நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் நடித்த போது அவரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர்.
அவ்வப்போது தனது குழந்தைகள் மற்றும் குடுபத்தினருடன் உள்ள புகைப்படத்தினை வெளியிட்டு வரும் நிலையில், இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

சொத்து மதிப்பு
திருமணத்திற்கு பின்பு முக்கிய வேடங்களில் மட்டும் நடிக்கும் சினேகா விஜய்யுடன் GOAT படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தெரிகின்றது.
வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் பட்டையைக் கிளப்பிவருவதுடன், தொலைக்காட்சிகளில் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கின்றார்.

சுமார் 24 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு மலையாள சினிமாவில் கலக்கிவரும் இவரது சொத்து 70 கோடி வரை இருக்கும் கூறப்படுகின்றது.
கணவர் பிரசன்னாவின் சொத்து மதிப்பும் 45 கோடி என்று இருவரது சொத்து மதிப்பையும் சேர்த்தால் சுமார் 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.
மேலும் சென்னையில் இவர்களுக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளதாகவும் இதன் மதிப்பு 15 கோடி என்று கூறப்படுகின்றது. இருவரும் தனித்தனியாக சொகுசு காரையும் பயன்படுத்தி வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |