ஈரம் பட நடிகை சிந்து மேனனுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்... குவியும் லைக்குகள்
ஈரம் திரைப்பட நடிகை சிந்து மேனனின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை சிந்து மேனன்
1996ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஹுலியா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகிய நடிகை தான் சிந்து மேனன்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று தான் ஈரம் திரைப்படம்.
இதில் நாயகியாக நடித்த சிந்து மேனனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து சிந்து மேனன் நடித்த படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வந்தார்கள்.
முரளியுடன் சமுத்திரம், விஜய்யின் யூத் படத்தில் அவரின் அத்தை மகளாகவும், ஈரம் படத்தில் நந்தாவின் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சிந்து மேனன் இதுவரை தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். பின் 2010ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகி விட்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமூக வளைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
தற்போது இரண்டு மகன் மற்றும் மகளுடன் இவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா? என இணையத்தளவாசிகள் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |