50 வயதிலும் ஸ்லிம்மாக இருக்கும் நடிகை சிம்ரன்! இவரது சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் சிம்ரன் இன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இவர்களின் சொத்து மதிப்பு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் உச்ச நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சிம்ரன். அஜித்துடன் வாலி, விஜய்யுடன் துள்ளாத மனமும் துள்ளும் என்று பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் பிரபல நடிகையாக வலம்வந்தவர், பின்பு முக்கிய துணை கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிக்க தொடங்கினார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், நடிகை சிம்ரனின் நடிப்பும் பாராட்டினார்கள்.
சொத்து மதிப்பு என்ன?
நடிகர் சிம்ரன் இன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவரது சொத்து மதிப்பு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.சிம்ரனுக்கு மொத்த சொத்து மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது.
இவரது சொந்த ஊரான மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் சொகுசு வீடு மற்றும் கோயம்புத்தூரில் பண்ணை வீடு என உள்ளது.
சினிமாவில் படம் நடிப்பதற்கு ரூ.50 முதல் 60 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |