கணவரை கண்டதும் கதறி அழுத ஸ்ருதிகா.. அடுத்த நொடி நடந்த விஷயம்- எமோஷனலான ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் கணவரை கண்டதும் கதறி துடித்த ஸ்ருதிகாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
உலகம் முழுவதும் மிக பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
100 நாட்கள் செல்லக் கூடிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும்.
இதிலிருந்து ஒருவரை 100 நாளாவது மக்கள் வாக்குக்கள் மூலம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்படுவார். அவருக்கு பரிசு தொகையும் பணமும் வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தி பிக்பாஸ் வீட்டிற்கு இந்த முறை தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார்.
இவர், பழம்பெரும் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாவார். அத்துடன் ஸ்ருதிகா கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு, அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
கதறி அழுத ஸ்ருதிகா
இந்த நிலையில், இந்தி ரசிகர்களால் ஆரம்பமாக காலங்களில் விமர்சிக்கப்பட்ட ஸ்ருதிகா தற்போது நன்றாக விளையாடி வருகிறார். இவருக்கு வரவர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேசெல்கிறது.
விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து ஸ்ருதிகா சிறப்பாக விளையாடி வருகிறார்.
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. அதில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ருதிகா அவருடைய கணவர் அர்ஜுனை பார்த்ததும் ஓடிவந்து குதித்து அவர் மீது தாவி ஏறிக் கொண்டார்.
அவரை கட்டிப்பிடித்து முத்தங்களை கொடுத்து விட்டு சில நிமிடங்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதையும் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவின் மகனும் வந்த தருணம் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
இந்த காணொளிகள் தற்போது ஸ்ருதிகா அர்ஜுனின் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |