150 நாட்களில் 12 கிலோ எடையை குறைத்த நடிகை... எப்படின்னு தெரியுமா?
பொதுவாகவே ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுகளின் நுகர்வு , ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை செய்வது, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உடல் பருமன் ஒரு உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.
எடை குறைப்பைப் பலரும் முயன்றாலும் கூட அதை அவ்வவு சுலபமாக அடைய முடிவதில்லை. இதற்கிடையே பாலிவுட் பிரபலமும், பாடகிமான ஷெஹ்னாஸ் கில் (Shehnaaz Gill) கடந்த வருடம் தனது உடல் எடையை யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைத்துள்ளார்.
வெறும் 5 மாதங்களிலேயே 12 கிலோ வரையில் உடல் எடையை குறைத்துள்ளார். அண்மையில் அவரின் அன்றாட உணவுப் பழக்கவழக்கம் தொடர்பில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கின்றார்.
அவர் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு என்னென்ன சாப்பிட்டார், எவ்வாறு உடற்பயிற்சி செய்தார் மற்றும் அவர் கடைப்பிடித்த வாழ்க்கைமுறை பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஷெஹ்னாஸ் கில்லின் உணவு பழக்கம்
ஷெஹ்னாஸ் கில் எப்போதும் தனது காலை உணவில் அதிக புரதம் இருக்கும் படி பார்த்துக்கொள்வாராம்.இதுகுறித்து அவர் கூறுகையில்,"என்னுடைய அவல் (Poha) ரெசிபி கொஞ்சம் வித்தியாசமானது.
அதில் அவலை விட காய்கறிகளையே அதிகமாக சேர்ப்பேன்.அதனால் அதில் நாளொன்றுக்கு தேவையான புரதம் முழுமையக கிடைத்துவிடும் என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் தயிரையும் சேர்த்து சாப்பிடுவாராம்.
மதிய உணவிலும் அதிக புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கார்ப்போஹைட்ரேட் ஆகிய ஊட்டச்சத்துக்களை சமச்சீரான அளவில் இருக்கும் வகையில் எடுத்துக்கொள்வாராம். குறிப்பாக பருப்பு நிச்சயம் அவரின் பிரதான உணவாக இருக்குமாம்.
அது தவிர முழு தானியங்கள், நாட்டு நெய்யுடன் ரொட்டி, காய்கறிகள், முளைத்த பயிர்கள் அடங்கிய சாலட் ஆகியவையே பிரதான மதிய உணவாக சாப்பிடுவாராம்.
இரவு சாப்பாட்டிலும் அதிக புரதச்சத்து நிறைந்த உணவு, முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வதுடன் தயிர் சேர்த்த கிச்சடி மற்றும் சுரைக்காய் சூப் ஆகியவற்றையும் தொடர்ந்து எடுத்துக்கொள்வாராம்.
இடையில் பசியெடுத்தால் தாமரை விதைகள் தான் அவரின் ஸ்நாக்ஸாக இருந்துள்ளது.அத்துடன் நல்ல தூக்கம் மற்றும் போதிய உடற்பயிற்சி ஆகியவையே உடல் எடையை விரைவாக குறைக்க காரணமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |