ஞாபக மறதியை அதிகப்படுத்தும் மருந்துகள்- தொடர்ந்து எடுப்பது ஆபத்து.. மருந்துவர் பரிந்துரை
சமீப காலமாக மக்களிடையே டிமென்ஷியா பிரச்சனை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
டிமென்ஷியாவால் சுமார் 55 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் புதிய டிமென்ஷியா வழக்குகள் பதிவாகியும் வருகின்றன.
அதிலும் குறிப்பாக இந்த நோயால் வயதானவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
“டிமென்ஷியா” என்பது ஒரு நரம்பியல் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாபக மறதி, மிகுந்த கவலை, முடிவுகளை எடுப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள்.
அந்த வகையில், மக்கள் அவதிக்குள்ளாகும் டிமென்ஷியா நோய் ஒருசில மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால் தூண்டப்படுவதாக மருந்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படியான மருந்துகள் தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
டிமென்ஷியா நோய் அபாயத்தை கொண்டு வரும் மருந்துகள்
1. டிமென்ஷியாவுக்கும் “பெனாட்ரில்” மருந்து வில்லைக்கும் தொடர்பு அதிகமாகவுள்ளது. பெனாட்ரிலை நீண்ட நாட்கள் எடுத்து வந்தால் நரம்பு மண்டலத்தில் செய்திகளை அனுப்பும் மற்றும் கற்கும் மற்றும் நினைவாற்றலை அசிடைல்கொலின் என்ற வேதிப்பொருள் தடுக்கிறது. இதனால் பெனாட்ரிலை அளவாக எடுத்து கொள்வது சிறந்தது.
2. நாள்பட்ட வலிக்கு நிவாரணியாக எடுத்து கொள்ளும் “ஓபியாய்டு” என்னும் மருந்து டிமென்ஷியா மற்றும் மூளையை மோசமாக்கும் வேலையை செய்கிறது. ஓபியாய்டு பயன்படுத்தாதவர்களை விட, நாள்பட்ட வலிக்கு நிவாரணியாக எடுத்து கொள்பவர்களுக்கு அல்சைமர் நோய் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
3. நீண்ட காலமாக ஒமேப்ரஸோல் என்னும் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் (PPI) பயன்படுத்தி வந்தால், அது டிமென்ஷியா அபாயத்தை அதிகப்படுத்தும். நரம்பியல் துறை ஆய்வுகளின் படி, சுமாராக நான்கரை ஆண்டுகளுக்கு ஒமேப்ரஸோல் எடுத்துக் கொண்டால் டிமென்ஷியா அபாயம் அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |