தேயிலை கூட கெட்டுப்போகும்னு உங்களுக்கு தெரியுமா? கண்டுபிடிக்க எளிய வழி இதோ
நம்மில் பெரும்பாலான நபர்கள் தேநீர் போடுவதற்கு பயன்படுத்தும் தேயிலை காலாவதியாகி கெட்டுப் போய்விட்டதை நாம் எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் புதிய நாளின் முதல் தெரிவாக தேநீர் இருக்கின்றது. தேநீர் அருந்துவது புத்துணர்ச்சியாக காணப்படுவதாக கூறுகின்றனர்.
இஞ்சி டீ, ஏலக்காய் டீ, மசால் டீ என பல வகைகளில் போட்டு நாம் பருகி வருகின்றோம். நாம் டீ போடுவதற்கு பயன்படுத்தும் தேயிலை கெட்டுப்போவதை எப்படி அறியலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
கெட்டுப்போன தேயிலை எப்படி கண்டுபிடிக்கலாம்?
தேயிலையின் தரத்தினை அதன் வாசனை, சுவை, நிறம் இவற்றினை வைத்து கண்டுபிடித்து விடலாம். டீ போடும் போது வலுவான வாசனை ஏதும் இல்லையெனில் தேயிலை கெட்டுப் போயிருக்கலாம்.
குறித்த இலையில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் ஆவியாகிவிடுவதால், அதன் சுவையும் மாறிவிடும். இதனால் குறித்த தேயிலையில் வீரியமோ, மணமோ இருக்காதாம்.
தேயிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கும் போது அது ஸ்ட்ராங்கான டீ குடித்த உணவு இருந்தால் அது கெட்டுப்போகாத தேயிலை ஆகும்.
ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படாத பச்சை மற்றும் வெள்ளை தேயிலைகள் சீக்கிரம் கெடக் கூடியவை. ஏனென்றால் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட தேயிலைகளில் நீண்ட நாள்கள் தரம் மாறாமல் இருக்கும்.
கெடாமல் பாதுகாப்பது எப்படி?
தேயிலைகள் கெட வாய்ப்புள்ளதால் அவற்றை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும். அதிக ஈரப்பதமான இடத்தில் தேயிலையை வைக்கக் கூடாது.
அதிக ஈரப்பதம் தேயிலையை கட்டிப் பிடிக்க வைக்கின்றது. காற்றுப் புகாத பாட்டில்களில் தேயிலையை போட்டு வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |