பிரபலமானவர்களிடம் பணம் பறிப்பார்.. சாந்தினி மீது மணிகண்டன் அளித்த பரபரப்பு புகார்!
கடந்த சில நாட்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் சம்பவம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இதையடுத்து, மகளிர் காவல்நிலையத்துல் 6 வழக்கு மணிகண்டன் மீது தொடர்ந்ததால், தலைமறைவான மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
பணம் பறிப்பதற்காகவே புகாரை கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறும் குற்றச்சாட்டு பொய். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் சேர்ந்து வாழ சம்மதித்தேன் என்று அந்த மனுவில் நடிகை சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மணிகண்டன் தரப்பில், சமூதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில், செயல்படுவதாகவும் மலேசியாவில் இதுபோன்று செயல்பட்டுள்ளார் என ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.