இளவரசியாகவே மாறிய செம்பருத்தி புகழ் ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள்
செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா அச்சு அசல் இளவரசி கெட்டப்பில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், அசத்தல் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஷபானா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் நடிகை ஷபானா.

1000 எப்பிசோட்டுகளை கடந்து செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் ஷபானாவுக்கு ஒரு அடையாளமாகவும் மாறியது.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.இதற்கிடையில், பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணம் இணையத்தில் கவனம் ஈர்த்தது.கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாகவும் மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றனர்.

திருமணத்தின் பின்னரும் அதே ஈடுப்பாட்டுடன் நடிப்பில் ஆர்வம் காட்டிவரும், ஷபானா குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்சியில் குக்காக பங்கேற்று ரன்னர் அப் ஆக தேர்வானார்.அதனை தொடர்ந்து தற்போது போலீஸ் போலீஸ் என்ற ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், தனது லுக்கை முழுமையாக மாற்றிய ஷபானா இளவரசி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |