80களில் கொடிகட்டி பறந்த நடிகை சீதா! தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
பிரபலங்கள் என்று கூறியதும் அவர்கள் தனது சினிமாத்துறையில் மாத்திரம்தான் கவனம் செலுத்துவார்கள் என பலரும் நினைத்திருப்பார்கள்.
ஆனால், அவர்களும் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு விடயங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
தற்போது நடிகைகள் பலரும் தங்கள் வீடுகளிலேயே மாடித் தோட்டங்களை வைத்து பராமரித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சீதா. இவர் தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றும் வைத்துள்ளார்.
ஒரு விடயத்தை முழுமையாக தெரிந்துகொண்டதன் பின்னர்தான் அதை நடைமுறைப்படுத்தி அதில் வரும் பயனை அனுபவிக்க முடியும். அவ்வாறு பார்த்தால் முதலில் சில செடிகளை தனது மாடித் தோட்டத்தில் நடவு செய்த சீதா, அதைக் குறித்த முழுமையான அறிவைப் பெற்றதன் பின்னர் கத்தரிக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், அவரை, கேரட், முள்ளங்கி என பல காய்கறிகளையும் கூடவே பழவகை மரங்களையும் வளர்த்திருக்கிறார்.
அதுமட்மின்றி பயன்தரும் கீரை வகைகளையும், பூச்செடிகளையும் வளர்த்து, அதற்கான பூச்சி விரட்டிகளையும் அவரே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்.
தான் இஞ்சி வளர்க்கும் தொட்டியைக் காண்பித்து, அதிலிருக்கும் தழைகளை பிடுங்கியதும் தொட்டி முழுவதும் இஞ்சி செழிப்பாக வளர்ந்திருப்பதைக் காட்டி, எவ்வளவு ஃபரெஷ்ஷாக இருக்கின்றது என்று சந்தோஷப்படுகின்றார்.
அதேபோல் தனது மாடித் தோட்டத்தில் விளைந்த சுண்டைக்காய், புடலங்காய், கத்தரி போன்றவற்றையும் அறுவடை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். நடிகை சீதாவின் மாடித்தோட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.