இந்த வியாக்கியானம் எல்லாம் பேசாத கிளம்பி வா.. பிரபலத்தை அலறவிட்ட இயக்குநர் பாலா
“இந்த வியாக்கியானம் எல்லாம் பேசாத கிளம்பி வான்னு சொன்னா வா..” என இயக்குநர் பாலா தன்னை திட்டியதாக நடிகை சங்கீதா கூறியுள்ளார்.
இயக்குநர் பாலா
தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் பாலா.
இவர் கடந்த சில வருடங்களாகவே சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருப்பதாக செய்தி வெளியாகி வருகின்றன.
தற்போது பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் “வணங்கான்” என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
அண்மையில் ட்ரெய்லர் வெளியாகி நிலையில் இன்னும் சில நாட்களில் படம் திரைக்கு வரும்.
இதனிடையே இயக்குநர் பாலா குறித்து நடிகை சங்கீதா சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.
கிளம்பி வான்னா வா..
இந்த நிலையில் இயக்குநர் பாலா குறித்து பேசிய சங்கீதா, “ பிதாமகன் வெளியாகிய காலக்கட்டத்தில் நான் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் எனது கைகளில் இருந்தன. அதனால் தமிழ் சினிமாவில் எனக்கு பெரிதாக டச் இல்லாமல் தான் இருந்தது.
அப்போது சூர்யா, விக்ரம் ஆகியோர் கோலிவுட்டில் பெரிய நடிகர்கள் ஆகி விட்டார்கள் என எனக்கும் தெரியாது. பிதாமகன் படத்தில் நடிப்பதற்காக பாலா என்னை அழைத்தார். அந்த சமயத்தில் நான் பாலகிருஷ்ணா படத்தில் நடித்து கொண்டிருந்தேன். கேட்டபோது நான் உடனே படம் பற்றியும் அதன் ஷெட்யூல் கேன்சல் ஆகியிருக்கிறது என்றும் கூறினேன்.
அதற்கு பாலா, “ உடனே அவர் சரி கிளம்பி மதுரைக்கு வா என்று கூறினார். அதற்கு நானோ, சார் அந்த கேரக்டரில் வேறு ஹீரோயின் நடித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவரது வேலையை கெடுத்து எனக்கு வேலை வேண்டாம் என அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், “ இந்த வியாக்கியானம் எல்லாம் நான் உனட்ட கேக்கல. கிளம்பி வான்னா வா..” எனக் கூறினார். அதன் பிறகு பிதாமகன் படத்தில் நடித்தேன்..” என நடந்ததை ஓபனாக பேசியிருக்கிறார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |