இப்பதான குழந்தை பிறந்துச்சு.. அதற்குள் இன்னொரு விஷேசமா? அமலாபால் கொண்டாட்டம்
நடிகை அமலாபாலுக்கு இரண்டு மாதக்குழந்தை இருக்கும் நிலையில் இன்னொரு விஷேசம் வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை அமலாபால்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை அமலா பால்.
இவர் கோலிவுட்டில் பிரபல நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் சில வெற்றிப்படங்களும் உள்ளன.
இதற்கிடையில் அமலா பால் பற்றிய சர்ச்சைகள் பரவலாக எழுந்ததால் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. பின்னர் தெலுங்கு, மலையாளம் என சென்று விட்டார்.
சினிமா வாழ்க்கை இப்படி சோர்வாக இருந்தாலும் சுற்றுலா, போட்டோ ஷீட் என இன்னொரு பக்கம் பிஸியாக இருந்தார்.
இரட்டை விஷேசம்
அப்போது திடீரென ஒரு நாள் நடிகை அமலா பால், தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தையொன்றும் பிறந்தது.
திருமணம் முதல் குழந்தை பிறந்தது வரை அனைத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
இப்படியொரு நிலையில் அமலாபால், நேற்றைய தினம் தனது முதலாவது திருமண நாளை கணவர், குழந்தையுடன் கொண்டாடியுள்ளார்.
ஏற்கனவே மகன் பிறந்த குஷியில் இருக்கும் அமலாபால் இரட்டை விஷேசமாக அன்றைய நாளை கொண்டாடியிருக்கிறார்.
இதன்போது கணவர், குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |