யானை மிதித்து சாக கிடந்த பிரபல நடிகை... மார்பில் கைவைத்து நபர் செய்த கேவலமான காரியம்
பிரபல சீரியல் நடிகை யானை மிதித்து சாக கிடந்த தருணத்தில் கூட, இவரது மார்பில் கைவைத்து சில நபர் மோசமாக நடந்து கொண்டதாக தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.
நடிகை சந்தியா ஜகர்லமுடி
இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில், நடிகை ரம்யாகிருஷ்ணனுடன் நடித்து பிரபலமடைந்தார், பின்பு சந்திரலேகா சீரியலிலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், சில வருடங்களுக்கு முன்பு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். பல பெண்களின் வாழ்க்கையில் இம்மாதிரியான வெளியே சொல்ல முடியாத பல அவலங்கள் நடந்து கொண்டிருகின்றது என்பதை கூறி உண்மைகளை உடைத்துள்ளார்.
இவர் கடந்த 2006ம் ஆண்டில் கும்பகோணத்தில் "செல்லமடி நீ எனக்கு" டைட்டில் பாடல் எடுக்கும் போது கோயில் யானையுடன் படப்பிடிப்பு சென்றுள்ளது.
யானை மிதித்து எலும்பு முறிவு
அப்பொழுது யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சில பாகங்களையும் அகற்ற நேர்த்துள்ளதாம். யானை மிதித்ததும் மயக்கத்திற்கு சென்ற இவர் தான் உயிர் பிழைத்ததே பெரிய விடயம், யானை தன் மீது கால் வைத்தது என்று நினைத்தேன், ஆனால் தும்பிக்கையால் நசுக்கியதாக கூறியுள்ளார்.
இவரை ஒரு தயாரிப்பாளர், சில டான்ஸர்கள் தூக்கிக்கொண்டு சென்ற அதில் ஒருவன் மட்டும், இவரது மார்பில் கை வைத்து கேவலமான காரியத்தை செய்துள்ளார். பிணம் மாதிரி கிடந்த என்னிடம் இப்படி நடந்து கொண்டதை நினைத்து, விணத்தை கூடவா இப்படி செய்வார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
குறித்த இளைஞர் யார் என்று தெரியாது என்று கூறியதோடு, இந்த விடயம் தனது பெற்றோர்களுக்கு கூட தெரியாது என்றும் இதிலிருந்து மீண்டு வருவதற்கு அதிக நாளாகியுள்ளதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |