எனக்கும் அவரைப்போல அலோபேசியா நோய் இருந்தது.. மனம் திறந்த நடிகை!
கடந்த நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில், நடிகர் வில் ஸ்மித் மனைவியை கிண்டல் செய்ததாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பல தகவல்கள் இணையத்தில் இதைப்பற்றி உலா வந்தாலும், மனைவிக்கு இருக்கும் நோய் என்ன என்பது பற்றி தான் பெரிய டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
அதன்படி அலோபேசியா அரேட்டா நோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களையும் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை சமீரா ரெட்டிக்கும் கூட ஒரு காலத்தில் அலோபேசியா அரேட்டா நோய் இருந்ததுள்ளது.
அதைப்பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் கூறியதாவது, இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை குறித்து அவர் விவரித்ததாவது, தமக்கு இந்த குறைபாடு இருப்பதை முதன் முதலில், கணவர் அக்ஷய் தான் கண்டறிந்தார் என்றும், அதற்குப் பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் சமீரா ரெட்டி தெரிவித்தார்.
ஐபிஎல் மூலம் உமேஷ் யாதவ் செய்த புதிய சாதனை - கொல்கத்தா அணியின் அபார வெற்றி!
உரிய சிகிச்சையை செய்யவேண்டும்
மேலும், எனது தலையின் பின்பகுதியில் 2 இன்ச் அளவுக்கு வழுக்கை தென்படுவதை எனது கணவர் அக்ஷய் கடந்த 2016ஆம் ஆண்டில் பார்த்தார். அதன்பின்னர் ஒரு மாதத்தில் மேலும் இரண்டு இடங்களில் அதேபோன்ற வழுக்கை தென்பட்டது.
உண்மையில் இந்த பிரச்சினையை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. இந்த நோய் கொண்டவர்களுக்கு உடல் ரீதியாக வேறு எந்த தொந்தரவும் இருக்காது.
அதேப்போல் உளப்பூர்வமாக இதை ஏற்றுக் கொள்வது சற்று சிக்கலான காரியம். சிலருக்கு இந்த நோயை எதிர்கொள்ளவும், முடி உதிர்வை தடுக்கவும் சிகிச்சை தேவைப்படலாம்.
அதே சமயம், கார்டிகாஸ்டெராய்ட்ஸ் என்ற ஊசியை செலுத்திக் கொண்டால் இது சரியாகிவிடும் என்று மருத்துவர் எனக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, முடி மெல்ல, மெல்ல வளர்ந்து விட்டது என தெரிவித்துள்ளார்.