தனது தந்தை மருத்துவ கொலை செய்யப்பட்டார்... பிரபல நடிகை ஆவேசம்
பிரபல பாலிவுட் நடிகையான சாம்பவ்னா சேத்தின் தந்தை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை சாம்பவ்னா சேத். இவர் மொடல் அழகியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் இருந்துள்ளார்.
இவரது தந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் டெல்லியில் உள்ள மருந்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால், அவரது மரணம் ‘மருத்துவ ரீதியிலான கொலை’ என்று சாம்பவ்னா சேத் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‘டெல்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை வார்டில் எனது தந்தை கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைவியில் தனது தந்தை சரியாக கவனிக்கபடவில்லை என்றும் செவிலியர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தான் காணொளி வெளியிட்டு 2 மணிநேரத்தில் தனது தந்தை மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
வெள்ளை கோட் அணிந்து அன்புக்குரியவர்களைக் கொல்லும் தீயசக்திகளாக செயல்படும் இவர்கள் எனது தந்தையை மருத்தவ ரீதியாக கொலை செய்துள்ளனர். கொரோனா மட்டும் அவரைக் கொல்லவில்லை.
தந்தையை இழந்த பின்பு, தனது வாழ்வில் ஒருவித பயம் ஏற்பட்டுள்ள நிலையிலும, தந்தை கற்பித்தபடி உண்மைக்காக போராட போகிறேன் என்றும் தனது வழக்கறிஞர் மூலமாக குறித்த மருத்துவமனைக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.