நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா! வைரலாகும் வீடியோக்காட்சி
பிரபல நடிகை சமந்தா தன்னுடைய நோயிலிருந்து மீண்டு, பழைய உடலை எடுப்பதற்காக பயங்காரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவிற்கு “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் தீவிர முயற்சியாலும், வெறித்தனமாக நடிப்பாலும் இன்று தென்னிந்தியாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவரின் முதல் படம் நினைத்த வெற்றியை தராவிட்டாலும், தொடர்ந்து வந்த “நீ தானே என் பொன் வசந்தம்” மற்றும் “நான் ஈ” போன்ற திரைப்படங்கள் ஒரளவு வெற்றியை கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல தமிழ் சினிமாவில் முன்னணி இருக்கும் நடிகர்களுடன் கலக்கியுள்ளார்.
இவருக்கு விஜய் தான் சரியான ஜோடி எனவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தது. மேலும் இவரின் பெரும்பாலான படங்களில் வெற்றிப்படங்கள் தான் அதிகம்.
இதனால் சமந்தாவிற்கான சம்பளமும் படத்திற்கு படம் ஏறிக் கொண்டே சென்றது.
ஹெவி ஒர்கவுட் களமிறங்கிய சமந்தா
இந்த நிலையில் சமந்தாவிற்கு சமிபக்காலமாக மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இவர் உடல் நிலை சற்று மோசமாக மாறியிருந்தது.
இதிலிருந்து மீண்டு வருவதற்கு கடுமையான பயிற்சிகளை செய்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா, தற்போது ஹெவி ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள், “பேலன்ஸ் இல்லாமல் அந்தர் பல்டி அடிக்கும் அளவிற்கு சமந்தாவின் பிரக்டிஸ் இருக்கிறது” என நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.