அதிரடியாக கம்பேக் கொடுக்கவுள்ள சமந்தா! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வீடியோ
நடிகை சமந்தா திரையுலகிற்கு கம்பேக் கொடுக்கும் விதமாக ஹாட்வேக் செய்து வொர்கட் செய்யும் வீடியோக்காட்சி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையின் பயணம்
தமிழ் சினிமாவிற்கு “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் டாஃப் நடிகை சமந்தா. இவருடைய குழந்தைத்தனமான நடிப்பால் முதல் படத்திலே ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.
தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல தமிழ் சினிமாவில் முன்னணி இருக்கும் நடிகர்களுடன் கலக்கியுள்ளார். இவருக்கு விஜய் தான் ஜோடி எனவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தது.
மேலும் இவரின் படங்களில் பெரும்பாலான படங்களில் நிறைய படங்கள் வெற்றிப்படங்களாக காணப்பட்டதால் இவருக்கான சம்பளமும் படத்திற்கு படம் ஏறிக் கொண்டே சென்றது. இதனாலேயே இவர் நிறைய படத்தில் கமிட் செய்யப்பட்டார்.
காதல் திருமணம்
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகவைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவரின் திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். தொடர்ந்து இவரின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
இவரின் திருமண வாழ்க்கை முடிவிற்கு பின்னர் புஸ்பா படத்தில் ஒரு பாடலில் தான கம்பேக் கொடுத்தார் அதனை தொடர்ந்து இவரின் கவர்ச்சியால் பல கோடி ரசிகர்களை வென்றுவிட்டார். இவர்கள் நடிகை மாத்திரமல்ல் ஒரு டப்பிங் ஆட்டிஸ்ட்டாகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் சமிபத்திலிருந்து மயோசியஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு கடுமையான சிகிச்சையில் இருந்து வந்தார். இவர் அந்த நோயிலிருந்து மீண்டு வருவதே ஒரு சவாலாக இருந்தது.
நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தாவின் அடுத்த கட்ட நகர்வு
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சமந்தா சிகிச்சையை முடித்து விட்டு அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு பயணம் செய்துள்ளார்.
அதன் பின்னர் திரைப்பட நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து சமந்தா, சினிமாவிற்கு கம்பேக் கொடுக்கும் வகையில் ஹெவி ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சமந்தாவின் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேலும் சமந்தா சிகிச்சையிலிருக்கும் போது பல தடவைகள் நாக சைதன்யாபல தடவைகள் சமந்தாவை பார்த்தாக தகவல் வெளியாகியிருப்பதால் மீண்டும் இவரின் திருமண வாழ்க்கை தொடரும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.