தனியாளாக சாதித்த நடிகை சமந்தா- அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு பாருங்க
15 வருடங்களாக சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா.
இவர் சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் பெரியளவு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இன்று உலகளவில் ரசிகர்களை பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் சமந்தா நடிப்பில், கடந்த ஆண்டு “சிட்டாடல் வெப்” தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து, “ரக்ட் பிரம்மாண்டம்” எனும் வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரையும் ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்கையில், சமந்தா தயாரித்து அவர் கதாநாயகியாக நடிக்கும் பங்காரம் திரைப்பட பணிகள் விரைவில் துவங்க உள்ளனர்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.
சினிமாவை போலவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வார்.
15 ஆண்டுகளை சினிமாவில் கடந்திருக்கும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அதாவது, நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 101 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் இவர் தற்போது ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
