அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய சமந்தா! அட இது ஒரு காரணமா?
நடிகை சமந்தா தான் அசைவம் சாப்பிடுவதையும் விலங்குசார் பொருட்களையும் முற்றிலும் தவிர்த்து வீகன் வாழ்க்கை முறையை பின்பற்ற தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முடிவை எடுப்பதற்கு சமந்தா கூறிய காரணம் இணையத்தில் தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு,உடல் நலனில் கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையில், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.
வதந்திகளை உண்மையாக்கும் வகையில், அண்மையில் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
தற்போது, சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தனது பிற பிராண்ட்களை ப்ரமோட் செய்து வருகிறார்.
அத்துடன் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

சமந்தா பேட்டி
இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் சமந்தா குறிப்பிடுகையில், தான் மொத்தமாக Veganஆக மாறியது குறித்து பகர்ந்துள்ளார்.
அவர், குறிப்பிடுகையில், மனிதர்களின் புரிந்துணர்வு மற்றும் அவர்களுக்கு அதன் மேல் இருக்கும் கருத்து குறித்தும், அது விலங்குகளுக்கு என்று நினைக்கும் போது அவர்களுக்கு அதில் எவ்வாறான கருத்து இருக்கிறது என்பதும் தனக்கு வெவ்வேறாக தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு, தனது செல்ல நாயை பிடிக்கும் என்று சொன்ன அவர், “நாய் ரொம்ப பிடிக்கும்ன்னா அப்போ ஏன் பிற விலங்குகளை சாப்பிடுகிறாய்?” என்று ஒருமுறை தன்னிடம் தானே கேள்வி கேட்டாராம். அந்த கேள்வி தனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த உணர்தல் தான் தன்னை அசை உணவுவையும் விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த விடயம் தற்போது இணையத்தில் வைராகியுள்ளதுடன் ட்ரோல் செய்யபட்டு வருகின்றது. இணையத்தில் ஒரு தரப்பினர் அவரது பேச்சை விமர்சனம் செய்து வருவதுடன், ஒரு சிலர், சமந்தா உபயோகிக்கும் பேக், காஸ்மெட்டிக் போன்ற பொருட்கள் மட்டும் விலங்கு பொருட்கள் இல்லையா? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |