சின்மயி வீட்டில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் சமந்தா - இணையவாசிகளின் கையில் சிக்கிய வீடியோக்காட்சி!
சின்மயி - ராகுல் வீட்டில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் சமந்தாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா.
இவர் இயக்குனர் “கவுதம் மேனன்” இயக்கத்தில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் சில வருடங்களில் நிறைவை சந்தித்தது.
சின்மயி குழந்தைகளுடன் சமந்தா
இப்போது தனிமையில் இருந்து வரும் சமந்தா, சினிமாவிலிருந்து ஒரு வருடம் ஓய்வில் இருந்து வருகிறார்.
சமீபக்காலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இடைவேளையை சமந்தா எடுத்துள்ளார். இப்படியொரு நிலையில், பிரபல பாடகி சின்மயி - ராகுல் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு குழந்தைகளுடன் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து நடிகை சமந்தா பல இன்னல்களுக்கு மத்தியில் தன்னுடைய மன மகிழ்ச்சி இருப்பதற்காக சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.