சமந்தாவின் கோபமான பதிவு! நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் காரணமா?
நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பயங்கரமாக கோபத்தில் பதிவ ஒன்றினை வெளியிட்டுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சமந்தா
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தினை கொண்டுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான தனது 4 வருட திருமணத்தை முடித்துக்கொண்டார். இந்த சம்பவம் தென்னிந்திய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
இவரது விவாகரத்திற்கு பின்பு பல விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத சமந்தா தனது வேலையில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.
குடிசை வீட்டில் வாழ்ந்த கூலித்தொழிலாளி! ஒரே இரவில் லட்சாதிபதியான அதிர்ஷ்டம்
சமந்தாவின் கோபமான பதிவு
சரியான விமர்சனங்கள் வரும்போது அமைதியான வழியில் தன் நிலைப்பாட்டை விளக்கியிருந்தாலும், இன்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது மனநிலையை இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
சமந்தா தனது ட்வீட்டில், "என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணை பலவீனம் என்றும் தவறாக நினைக்காதீர்கள். கருணைக்கு ஒரு காலாவதி தேதி இருக்கலாம் #JustSaying" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், நடிகை யாரை குறிவைத்து ட்வீட் செய்தார் என நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.
Don't ever mistake
— Samantha (@Samanthaprabhu2) April 22, 2022
MY SILENCE
for ignorance,
MY CALMNESS
for acceptance,
My
KINDNESS
for weakness.
நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அது குறித்து இவரிடம் கேள்வி கேட்டு பல விமர்சனங்களை முன்வைத்து வருவதால் இவ்வாறு கோபத்தில் பதிவு வெளியிட்டுள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
பாரதி கண்ணம்மா ரோஷினியா இது ! கதாநாயகிகளையே மிஞ்சும் கிளாமர்..