முன்னாள் கணவனுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா!
முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை சமந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகையான சமந்தா தனது முன்னாள் கணவர நாக சைதன்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தாக இருவரும் அறிவித்தனர்.
விவாகரத்துக்கு முன் ஐதராபாத்தில் நாக சைதன்யாவுடன் வாழ்ந்து வந்த வீட்டை சமந்தா பெரும் தொகை கொடுத்து வாங்கியதாக பிரபல நடிகர் முரளி மோகன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்துகொண்டபோது இருவரும் சேர்ந்து ஐதராபாத்தில் ஒரு தனி வீடு வாங்கி அதில் இருவரும் வசித்து வந்ததாக கூறினார்.

மேலும், சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிந்து செல்லும்போது, அந்த வீட்டை அப்படியே விற்றுவிட்டுச் சென்றுவிட்டனர்.
சமந்தா இப்பொது தனது நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையாக உழைத்து பணம் ஏற்பாடு செய்து, அதிக விலை கொடுத்து அந்த வீட்டை வாங்கியுள்ளதாக முரளி கூறியுள்ளார்.
இவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், விவாகரத்துக்கு பின் இருவரும் தங்களது நடிப்பில் மும்முரமாக கவனம் செலுத்த தொடங்கினர்.
அந்த வகையில், சமந்தாவின் கைவசத்தில் தற்போது யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்கள் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
