என்னை அசிங்கப்படுத்தினார்கள்! உண்மையை உடைத்த பிக்பாஸ் சாக்ஷி
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை சாக்ஷி விஸ்வாசம் மற்றும் காலா திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது.
நடிப்புக்கு இடையே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் குஷிப்படுத்தி வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தற்போது, தன்னுடைய பிட்னஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், மஞ்சள் உடையில் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படத்துக்கு கீழே தன்னுடைய பழைய நினைவுகளையும், சோஷியல் மெசேஜ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், "‘’நான் பள்ளியில் படித்தபோது தோழிகள் சிலர், என்னைப் பார்த்து நீ குண்டாகவும் அசிங்கமாகவும் இருக்கிறாய்.
எந்த பையனும் உன்னை விரும்ப மாட்டான். மற்ற பெண்களும் உன்னுடன் நட்பாக பழக விரும்ப மாட்டார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது தினமும் என்னை பிடிப்பதாக சொல்லி ஏகப்பட்ட கடிதங்கள் வருகிறது.
ஒருவருக்கு மன அழகுதான் முக்கியம். அது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எனவே யாரையும் இழிவுப்படுத்த வேண்டாம்.
பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் எதுவாக இருந்தாலும் யாரையும் குறைவாக மதிப்பிட்டு பேச வேண்டாம். ஒவ்வொரு தனிமனிதனும் இந்த பிரபஞ்சத்தில் அவரவர் சொந்த வழியில் அழகானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
என்னை நிபந்தனையில்லாமல் நேசிப்பவர்களுக்கும் எனக்காக இருப்பதற்காகவும் நன்றி. நீங்கள்தான் எனது பெரிய பலம்.
எப்போதும் நேர்மறையாக இருங்கள். கடினமாக உழையுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களே செய்யுங்கள். உங்கள் வலியை சக்தியாக மாற்றவும்’’ என தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.