இந்த காட்சியில் நடித்ததற்கு கதறி அழுதேன்... 20 ஆண்டு உண்மையை உடைத்த நடிகை சதா
நடிகை சதா ஜெயம் படத்தில் கடைசியில் நடித்த ஒரு காட்சியை நினைத்து கதறியழுததாக பல ஆண்டுகளுக்கு பின்பு உண்மையை கூறியுள்ளார்.
நடிகை சதா
2003ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் ரீமேக்கான ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சதா.
இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
கடைசியாக தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான டார்ச்லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் நடித்து அசத்தினார்.
உடைந்த 20 ஆண்டு உணமைகள்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சதா, ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தனது கன்னத்தில் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்றது.
இக்காட்சியில் நடிகை சதா நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் கதைக்கு இது கட்டாயம் தேவை என்று கூறி நடிக்க சொன்னதாகவும், அந்த காட்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று அழுததாகவும், தற்போதும் இக்காட்சியை பார்த்தாலும், நினைத்தாலும் வேதனையாக இருப்பதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |