மெல்ல ஒரு கீரல் போடுங்க.. அலறியப்படி செட்டிலிருந்து வெளியேறிய சிவாங்கி- வைரலாகும் காணொளி!
" மெல்ல ஒரு கீரல் மீது போடுங்க.." என கூறியதை கேட்டு அலறியப்படி செட்டிலிருந்து ஓடிய சிவாங்கியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகியவர் தான் சிவாங்கி.
இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்தக்குரலால் பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த ஷோவில் கோமாளியாக அறிமுகமாகி தற்போது குக்காக சீசன் 4 வை சிறப்பித்து வருகிறார். சிவாங்கியை பொருத்தமட்டில் நகைச்சுவை என்பது கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது.
சிவாங்கி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, “டான்” திரைப்படத்திலும் கதாநாயகிக்கு நண்பியாக நடித்திருப்பார்.
கத்தியப்படி செட்டிலிருந்து வெளியேற்றம்
இந்த நிலையில், பாடல், நிகழ்வுகள் என பிஸியாக இருந்தாலும் சிவாங்கி அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், குக்களாக மாறுவதற்காக சமையல் கற்றுக் கொள்ளும் சிவாங்கி மீனின் மீதுள்ள தோலை மட்டும் வெட்டியெடுக்குமாறு குக் ஒருவர் கூறுகிறார்.
மீனின் மீது கை வைத்த சிவாங்கி பயத்தில் அங்கிருந்து கத்தியப்படி வெளியில் ஓடியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காட்சியை சிவாங்கி அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவை பார்த்த இணையவாசிகள் “சிவாங்கிக்கு மீன் என்றாலும் பயமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.